96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
23 ஆண்டுகளுக்கு பின்னர் கடனை திருப்பி கொடுத்த நடிகை மும்தாஜ்.. யாரிடம் எவ்வுளவு வாங்கினார் தெரியுமா?..!
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் மும்தாஜ். இவர் திருமணத்திற்கு பின்னர் தமிழ் திரையுலகில் பெருவாரியான படங்களில் நடிக்கவில்லை. இறுதியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக தமிழக மக்களின் முன்பு தோன்றியிருந்தார்.
இவர் தனது கணவர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நடிகை மும்தாஜ் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னதாக இயக்குனர் & நடிகர் பார்த்தீபனிடம் அவசரத்திற்காக ரூ.15 ஆயிரம் கடன் வாங்கி இருக்கிறார்.
அந்த பணத்தை இடைப்பட்ட காலங்களில் அவரால் மீண்டும் செலுத்த இயலாத நிலையில், பார்த்தீபனும் காலப்போக்கில் அதனை மறந்துள்ளார். ஆனால், சமீபத்தில் நடிகை மும்தாஜ் பார்த்தீபனிடம் பெற்ற கடனை திருப்பி கொடுத்துள்ளார்.
இந்த விஷயத்தை தனது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் பார்த்தீபன், நானே மறந்த விஷயத்தை அவர் திரும்பி செய்துள்ளார். அவரின் குணத்தை நன்றி கூறி எப்படி சொல்வது என தெரியவில்லை என்று பகிர்ந்துள்ளார்.