ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
நடிகை நக்மாவிற்கு திருமணம்! எப்பொழுது தெரியுமா? அவரே கூறிய தகவல்.!

தமிழ் சினிமாவில் 1990களில் ரஜினி, சத்யராஜ், சரத்குமார், கார்த்திக், பிரபுதேவா, அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகை நக்மா. இவர் நடிகை ஜோதிகாவின் சகோதரி ஆவர்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து ஒருகாலக்கட்டதில் சினிமாவை விட்டு விலகிய நக்மா காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இணைந்தார்.
இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நக்மா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். அதாவது பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அம்மாவாக நடிக்கஉள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 44 வயது நிறைந்த நடிகை நக்மா தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, திருமணம் என்பது என் கையில் இல்லை, அதை கடவுள் தான் தீர்மானிக்க வேண்டும். மேலும் எனக்கான நேரம் வரும்போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன்"