திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வெள்ளத்தில் இரட்டை குழந்தைகளுடன் சிக்கிய நமீதா பத்திரமாக மீட்பு.!
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் பெய்த அதிக கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இன்னும் பலர் வெள்ள நீரில் சிக்கிக் கொண்டு, அத்தியாவசிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை துரைப்பாக்கத்தில் நடிகை நமீதா தனது கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக வீட்டு மாடியில் நின்று உதவிக்கு கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் குழுவினர், நமீதா மற்றும் அவரது குடும்பத்தினரை பத்திரமாக வைத்துள்ளனர். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.