மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நடிக்க வரலைன்னா கண்டிப்பா அந்த தொழிலை தான் செஞ்சுருப்பன்" - ரசிகரின் கேள்விக்கு சிம்பு பட நடிகை நிதி அகர்வால் ஓபன்டாக்..!!
தமிழில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை நிதி அகர்வால். இவர் ஜெயம்ரவியுடன் இணைந்து பூமி படத்திலும் நடித்திருந்தார். அத்துடன் தெலுங்கு, தமிழிலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது சென்னையில் இருக்கும் அவர் நேரலையில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அதில் "தான் ஒர்க்அவுட் செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், யோகாவில் இன்ட்ரஸ்ட் உள்ளதாகவும் கூறியிருக்கிறார்". அப்போது 'நீங்கள் நடிக்க வரவில்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள்?' என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த நித்தி அகர்வால், "நான் நடிப்பில் ஜெயிக்கவில்லை என்றால் வீட்டில் என்னை விட்டிருக்க மாட்டார்கள்.
சம்பாதிக்க ஏதாவது வேலைக்கு போ என சொல்லியிருப்பார்கள். நான் நடிகையாக வில்லை என்றால் பேஷன் பிராண்ட் தொடங்கி இருப்பேன். ஃபேஷன் டிசைனிங் படித்துவிட்டு அதனை செய்திருப்பேன். என் குடும்பம் பிசினஸ் பின்னணி கொண்டது. அந்த அறிவை கண்டிப்பாக தொழிலில் பயன்படுத்தி இருப்பேன்" என்று நிதி அகர்வால் கூறியிருக்கிறார்.