மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரே அறையில் இருந்தது ஏன்? 60 வயது நடிகருடனான தொடர்பு குறித்து பிரபல நடிகை வெளியிட்ட தகவல்!!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பவித்ரா லோகேஷ். இவர் சுசீந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் அவரை பிரிந்து கடந்த 6 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கும், நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணனான நடிகர் நரேஷ் பாபுவுடன் திருமணம் நடைபெற்றதாக தகவல் பரவி வந்தது. மேலும் இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தபோது அங்கு சென்ற நரேஷ் பாபுவின் மூன்றாவது மனைவி ரம்யா அவர்களை செருப்பால் அடிக்க முயன்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
மேலும் நடிகை பவித்ரா பணத்துக்காக தனது கணவரை 4வது திருமணம் செய்து கொண்டு குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இதனை மறுத்த பவித்ரா நான் நரேஷை 4வதாக திருமணம் செய்யவில்லை, 200 படங்களில் நடித்த நான், 4, 5 படங்களில் அவருடன் நடித்துள்ளேன். எங்களுக்குள் நல்ல நட்பே உள்ளது என தெரிவித்தார்.
மேலும் சுசீந்திர பிரசாத்தை திருமணம் செய்யும் போது அவரிடம் பணம்,வீடு, கார் இல்லை, ஆனாலும் அவருடன் 11 வருடங்கள் வாழ்ந்ததாக அவர் கூறியுள்ளார்.