நடிகர் மோகனின் வாழ்க்கையை நாசமாக்கிய நடிகை யார் தெரியுமா.? மோகனிற்கு எய்ட்ஸ் நோய் வந்தது உண்மையா.. வெளிவந்த பகிர தகவல்.?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தவர் மோகன். 80களின் ஆரம்ப கட்டத்தில் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இவர் பயணங்கள் முடிவதில்லை, இளமை காலங்கள், இதய கோவில், பிள்ளை நிலா, கோபுரங்கள் சாய்வதில்லை, மௌன ராகம், மெல்ல திறந்தது கதவு, உதயகீதம் போன்ற வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து மறக்க முடியாத நடிகராக இன்று வரை நிலைத்து நிற்கிறார்.
இதனையடுத்து மோகனை திரைத்துறையில் இருந்த பல நடிகைகளும் ஒருதலையாக காதலித்து வந்துள்ளனர். அவ்வாறு தற்போது பாக்யராஜின் மனைவியாக இருக்கும் பூர்ணிமா அந்த காலகட்டத்தில் மோகனை ஒருதலையாக காதலித்திருக்கிறார். இதனை மோகனிடம் கூறவே அவர் மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பூர்ணிமா, மோகனிற்கு எய்ட்ஸ் இருக்கிறது. பல பெண்களுடன் தகாத உறவில் இருக்கிறார். அவருடன் யாரும் நடிக்காதீர்கள் என்று வதந்தி கிளப்பி விட்டாராம். அன்றிலிருந்து மோகனின் சினிமா வாழ்க்கை முடங்கிவிட்டது என்று பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு யு ட்யூப் பேட்டியில் கூறியிருக்கிறார்.