"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபல தமிழ் நடிகை! யார் தெரியுமா?
இந்திய சினிமாவை உலக அளவில் எடுத்து சென்ற பெருமை இயக்குனர் ராஜமௌலியை சேரும். பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 என்ற மாபெரும் படைப்புகளை இந்திய சினிமாவிற்கு தந்துள்ளார் ராஜமௌலி. தற்போது ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோரை வைத்து RRR என்ற படத்தினை ராஜமௌலி இயக்க உள்ளார்.
படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் யார் யார், படத்தின் நாயகி யார் என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் தமிழில் பருத்தி வீரன் திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை ப்ரியாமணி ராஜமௌலியின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் ஒருசில படங்களில் நடித்துள்ள ப்ரியாமணி தற்போது வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் ராஜமவுலின் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளது ப்ரொயமணி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் நாயகியாக நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், பிரியாமணி நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இவர் நாயகியா நடிக்கிறாரா அல்லது மற்ற கதாபாத்திரமா என்பது முறையான அறிவிப்புக்குப் பின்னரே தெரிய வரும். கடந்த 2007-ஆம் ஆண்டு ஜூனியர் என்டிஆரை வைத்து ராஜமவுலி இயக்கிய ‘எமடோன்கா’ என்ற தெலுங்கு படத்தில் பிரியாமணி நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.