மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் இந்த பிரபல நடிகைதான் நடிக்க இருந்ததாம்! ஆனால்?
இயக்குனர் முருகதாஸ், தளபதி விஜய் கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் துப்பாக்கி. நூறு கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் உள்ளே நுழைந்த தளபதியின் முதல் திரைப்படமும் துப்பாக்கிதான். ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் துப்பாக்கி.
இந்திய ராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு ராணுவ வீரன் தனது விடுமுறையில் வீட்டிற்கு வரும்போது தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும், ராணுவத்தில் இருக்கும் ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தையையும் மையமாக கொண்டு கதை உருவாக்கப்பட்டிருக்கும்.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருப்பார். காஜல் அகர்வாலின் சினிமா பயணத்தில் துப்பாக்கி படம் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம். ஆனால் காஜல் அகர்வால் இடத்திற்கு முதலில் பரிந்துரைக்கப்பட்டவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்க் தானாம். ஆனால் ரகுல் ப்ரீத் சிங்க் தற்போது படங்களில் நடிக்க தயாராக இல்லை என யாரோ இயக்குனர் முருகதாஸிடம் கூறியுள்ளனர். இதனால் முருகதாஸ் அவர்கள் ரகுலை விட்டுவிட்டு காஜல் அகர்வாலை கமிட் செய்துள்ளார்.
பின்னர் இந்த விஷயம் அறிந்த ரகுல் ப்ரீத் சிங்க், இயக்குனர் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் யாரோ சொன்னதை வைத்து இப்படி செய்துவிட்டாரே என புலம்பியுள்ளார்.