#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதலுக்கு பொறுமை அவசியம்., அதுக்குலாம் என்கிட்ட டைம் இல்ல - மனம்திறந்த ராஷ்மிகா மந்தனா..!!
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகாவும் கீதா கோவிந்தம் படத்திலில் நடித்து பிரபலமடைந்தனர். இப்படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரியும் தாறுமாறாக இருந்ததால், டியர் காம்ரேட் என்ற படத்திலும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த இரண்டு படங்களின் வெற்றிக்கு பின்னர், இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் அவர்கள், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான். காதலர்கள் இல்லை என்று கூறி வரும் நிலையில், அடிக்கடி இவர்கள் ஜோடியாக ஊர் சுற்றும் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளிவந்துகொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் காதல் குறித்த வதந்திகள் பற்றி நடிகை ராஷ்மிகா மந்தனா மனம் திறந்து பேசியுள்ளார்.
குட்பை பட பிரமோஷனில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா பேசுகையில், "எனது குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கே என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. காதலில் இருந்தால் அதற்காக நேரம் செலவிட வேண்டியிருக்கும். காதலுக்கு பொறுமை மிகவும் அவசியம். அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் காதல் வந்தால் சொல்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.