96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சாய் பல்லவியின் தங்கை போட்டோவை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்! புகைப்படம்!
மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் சாய் பல்லவி. பிரேமம் என்ற ஒரே படத்தில் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார் சாய் பல்லவி. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிரபலமானார் சாய் பல்லவி.
வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற சாய் பல்லவி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலையே வெளியேற்றப்பட்டார் சாய் பல்லவி.
அதன்பின்னர் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துவருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாறி 2 படத்தில் கதாநாயகியாக நடித்தார் சாய் பல்லவி.
இந்நிலையில் சாய் பல்லவி தங்கை மற்றும் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சாய் பல்லவியின் தங்கை பார்ப்பதற்கு நடிகை சாய் பல்லவிபோலவே இருப்பதால் இது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.