மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பிரபல நடிகை சமீரா ரெட்டி! புகைப்படம்!
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வாரணம் ஆயிரம். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முதல் படத்திலையே மிகவும் பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி. படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
முதல் படத்தின் வெற்றியை அடுத்து அஜித்துடன் அசல், விஷாலுடன் வெடி, மாதவனுடன் வேட்டை போன்ற படங்களில் நடித்திருந்தார் சமீரா ரெட்டி. அதன்பின்னார் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழக்கையில் பிசியாக மாறிவிட்டார் சமீரா.
நடிகை சமீராவுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது அவர் மீண்டும் கற்பமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் ஒருசில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் 2015 இல் 102 கிலோவில் இருந்த சமீரா தற்போது உடல் எடையை குறைத்து 65 கிலோவிற்கு மாறியுள்ளதாக ஒரு புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
102 கிலோவில் இருந்த சமீரா ரெட்டியை பார்த்த ரசிகர்கள் அவரா இது? அடையாளமே தெரியவில்லையே என கமெண்ட் செய்து வருகின்றனர்.