மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. நடிகை சங்கீதாவிற்கு இவ்வளவு பெரிய மகளா! அம்மாவை மாதிரியே செம்ம அழகா இருக்காரு பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த பூஞ்சோலை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானவர் நடிகை சங்கீதா. அதனைத் தொடர்ந்து அவர் 90ஸ் காலகட்டங்களில் ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
திறமையான நடிகையான இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும், சொல்லுமளவிற்கு ஹீரோயின் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. நடிகை சங்கீதா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை சங்கீதா 2009ம் ஆண்டு பாடகர் கிரிஷை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஷிவ்யா என்ற ஒரு மகள் உள்ளார்.
மேலும் அண்மையில் நடிகை சங்கீதாவிற்கு கலைமாமணி விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகை சங்கீதா சமீபத்தில் தனது குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில், அதனை கண்ட ரசிகர்கள் நடிகை சங்கீதாவின் மகளா இது? நல்லா வளந்துட்டாரே என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.