#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நானும் பொண்ணுதான்., என் புருஷன்கிட்ட அத எதிர்பார்க்க எனக்கு உரிமையில்லையா? - நடிகை சீதா பார்த்திபன் குறித்து ஓபன்டாக்..!!
தென்னிந்திய சினிமாவில் 80'sகளில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் சீதா. இவர் ஆண்பாவம், குரு சிஷ்யன், ராஜாநடை உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தொடக்கத்தில் இவரின் சினிமா வாழ்க்கை அமோகமாக இருந்தாலும், அடுத்தடுத்து வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கு காரணமாக அவரின் திருமணம் என்று கூறப்படுகிறது. ஆண்பாவம் படத்திற்குப் பின்னர், பார்த்திபன் இயக்கிய புதிய பாதை படத்தில் நடித்த சீதாவுக்கும், அதே படத்தில் நாயகனாக நடித்த பார்த்திபனுக்கும் காதல்ஏற்பட்டுள்ளது.
சீதாவின் காதலை வீட்டில் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், இருவரும் கடந்த 1989-ஆம் ஆண்டு நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்தனர். திருமணத்திற்கு பின்னர் சீதா நடிப்பதில் பார்த்திபனுக்கு விருப்பமில்லாத காரணத்தால், அவர் 10 வருடங்கள் திரைவாழ்க்கைக்கு விடுமுறை விட்டிருந்தார்.
திருமணத்திற்குபின் இரண்டு மகள்கள் பிறந்த நிலையில், ஒரு மகனை தத்தெடுத்து வளர்த்தனர். இதனை தொடர்ந்து கடந்த 2001-ஆம் வருடம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதனால் பத்து வருடங்களுக்குப் பின்னர் சீதா மீண்டும் நடிக்க தொடங்கினார்.
வயதானதால் திரையில் பெரிய வாய்ப்பு கிடைக்காத நிலையில், சீரியல் நடிக்க தொடங்கிய சீதாவுக்கு 2010-ஆம் ஆண்டு சீரியல் நடிகரான சதீஷ் என்பவருடன் காதல் மலர்ந்தது.இருவரும் ஒன்றாக வாழ்ந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
43 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சீதா 6 ஆண்டுகளில் அவரையும் விவாகரத்து செய்தார். இந்த நிலையில் தற்போது தாயுடன் தனியாக வசித்து வரும் சீதா, பார்த்திபனை பிரிந்தது குறித்து பேசி இருக்கிறார்.
அவர் கூறியதாவது, எங்களது பிரிவிற்கு நான் எதிர்பார்ப்பது தான் காரணம். நான் உலகம் தெரியாத மிகவும் சராசரி பொண்ணு. நடுத்தர குடும்பத்திலிருந்து வந்ததால் வசதி படைத்தவர் கிடையாது. நானும், அவரும் அப்போது நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தான்.
நான் பணத்தை அவரிடம் எதிர்பார்க்கவில்லை. நான் சாதாரண பெண். நான் எதிர்பார்த்த விஷயம், என் புருஷன் எனக்கு மட்டும்தான் என்பதைப் போல தான். அவரின் அன்பு எனக்கு கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்தேன். அன்பு கூட கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கையில் என்ன உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.