#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"அந்த விஷயத்தை மட்டும் நான் மறக்கவே மாட்டேன்" என்று கூறிய சகிலா.. ஷகிலாவை அடித்த சில்க் ஸ்மிதா.?
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமானவர் நடிகை சகிலா. முன்னாள் ஆபாச நடிகையான ஷகிலா சமீபத்தில் ஒரு பேட்டியில் சர்ச்சையை ஏற்படுத்தும்விதமாக பேசிய வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நடிகை சகிலா 1995 ஆம் வருடம் 'ப்ளே கேர்ள்ஸ்' திரைப்படத்தின் மூலம் நடிகை சில்க் ஸ்மிதாவுடன் இணைந்து நடித்திருந்தார். முதல்படமே அடல்ட் திரைப்படமாக நடித்ததால் ஷகிலாவை ஆபாச நடிகையாக திரையுலகினர் பார்த்து வந்தனர்.
'ப்ளே கேர்ள்ஸ்' திரைப்படத்தின் ஒரு காட்சியில் சில்க் ஸ்மிதா ஷகிலாவை கன்னத்தில் அறைவது போல் காட்சி எடுக்க வேண்டும். அப்போது ஷகீலா சில்க்ஸ்மிதாவிடம் எப்படி அறைவீர்கள் என்று கேட்டு மறுபடியும் மறுபடியும் தொல்லை செய்து வந்துள்ளார்.
இதனால் எரிச்சலடைந்த சில்க் ஸ்மிதா ஷகிலாவை ஒரு கட்டத்தில் ஓங்கி அறைந்துவிட்டாராம். இந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது என்று சகிலா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.