#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒன்று உங்களுக்கு.. மற்றொன்று பிறருக்கு! நடிகை ஷகிலா செய்த அசத்தல் காரியம்! குவியும் பாராட்டுக்கள்!!
90களில் பல மொழிகளிலும் ஆபாச படங்களில் நடித்து தனது கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தவர் நடிகை ஷகிலா. ஆனால் தன்னை ஒரு கவர்ச்சிப் பொருளாக பார்ப்பதை விரும்பாத ஷகிலா தனக்கான அடையாளத்தை மாற்ற ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவர் மீதான கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்றியது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.
அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷகிலா தனது சமையல் திறனை வெளிப்படுத்தி, அசத்தலாக சமைத்து நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். மேலும் அனைவரிடமும் அன்பாக இருந்த அவரை போட்டியாளர்கள் கோமாளிகள் என பலரும் அம்மா, மம்மி என பாசத்துடன் அழைத்து வந்தனர்.
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கபட்டிருக்கும் நிலையில், சாலையோரம் வாழும் ஏழை மக்களுக்கு நடிகை ஷகிலா உணவளித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில், உங்களுக்கு இரு கைகள் உள்ளது. ஒன்று உங்களின் உதவிக்காக, மற்றொன்று பிறருக்கு உதவுவதற்காக. பயன்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகை ஷகிலா விற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.