மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் நடிகை ஷெரினுக்கு ஏற்பட்ட பிரச்சனை! என்னாச்சு? அவரே வெளியிட்ட தகவல்!!
நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை தட்டுப்பாடு போன்றவற்றால் ஏராளமான உயிரிழப்புகளும் நேர்ந்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்களிடம் இருக்கும் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்கும் வகையில் திரையுலக பிரபலங்கள் பலரும் தாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஷெரின் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்த புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்ட அவர், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு தனக்கு 102 டிகிரி வரை கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதாகவும், தாங்கமுடியாத உடல் வலி மற்றும் தலைவலி காரணமாக மிகவும் சோர்வுடன் இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அவர், தடுப்பூசி வேலை செய்யத் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.