குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
"விஜய் சேதுபதியோடு ஒரு நாள்.! பணமே வேண்டாம்" பிரபல நடிகையின் ஆசை.!
தமிழ்த் திரையுலகில் சிறு, சிறு கதாப்பாத்திரங்களில், குணச்சித்திர வேதங்களில் நடித்து வந்தவர் தான் விஜய் சேதுபதி. இதையடுத்து இவர், 'பீட்ஸா' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து இவர் தென்மேற்குப் பருவக்காற்று, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, சேதுபதி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர், தற்போது வில்லனாகவும் நடித்து அனைவரையும் தன் சிறப்பான நடிப்பால் வசீகரித்திருக்கிறார், விஜய் சேதுபதி.
இதேபோல் தமிழில் காளி, இஸ்பேட் ராஜாவும், இதயராணியும் படங்களில் நடித்தவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் தமிழ் மட்டுமின்றி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடிக்கிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் இவரிடம், " எந்த நடிகருடன் நடிப்பதற்கு சம்பளமே வேண்டாம் என்று கூறுவீர்கள்?" என்று கேட்டதற்கு, உடனே ஷில்பா " விஜய் சேதுபதியுடன் ஒரு நாள் என்றால் கூட சம்பளமே வேண்டாம்" என்று கூறினார்.