"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
"இந்த வயதிலும் எப்பிடி உடலை இவ்ளோ அழகா வச்சிருக்றீங்க".. பாராட்டிய பத்திரிக்கையாளருக்கு காட்டமாக பதிலளித்த ஸ்ரேயா.?
தென்னிந்திய திரைதுறையில் பிரபல நடிகையான ஸ்ரேயா சரன் முதன்முதலில் 2001ஆம் வருடத்தில் வெளியான இசுதாம் எனும் தெலுங்கு மொழி திரைபடத்தின் மூலம் அறிமுகமானார்.முதல் படத்திலேயே மக்களின் மனதை கவர்ந்து அடுத்தடுத்த திரைபடங்களில் நடிக்க தொடங்கினார்.
இதன்படி 2007ஆம் வருடம் ரஜினி நடித்த சிவாஜி திரைபடத்தின் மூலம் தமிழில் காலடியெடுத்து வைத்தார். முதல் படமே மிகபெரிய ஹிட்டாகியதை தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்தன. இவ்வாறு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ரவுண்டு கட்டி நடித்துகொண்டிருந்தார்.
இதுபோன்ற நிலையில், திருமணத்திற்கு பிறகு நடிப்பதற்கு ப்ரேக் விட்ட ஸ்ரேயா சரன் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதன்படி இவர் நடித்து வெளியாகவுள்ள தெலுங்கு மொழி திரைபடத்தின் புரோமோஷனில் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கோபமாக பதிலளித்திருக்கிறார்.
பத்திரிக்கையாளர் ஸ்ரேயாவிடம் திருமணமாகி குழந்தை பிறந்த பிறகும் எப்பிடி உடலை அழகாக வைத்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்டதற்கு, ஸ்ரேயா இதே கேள்வியை தெலுங்கு ஹீரோக்களிடம் கேட்பீர்களா, பெண்களிடம் மட்டும் இந்த கேள்வியை கேட்பதற்கு காரணம் என்ன என்று கோபமாக பேசிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.