ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
பிரபல நடிகரின் காலில் விழுந்த மன்னிப்பு கேட்ட சிம்ரன்.. அதிர்ச்சியடைந்த பட குழுவினர்.?

தமிழ் சினிமாவில் நடிப்பு சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்தவர் சிவாஜி. இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் மூலம் மக்களை கவர்ந்து 'நடிகர் திலகம்' எனும் பெயர் பெற்றார். முதன் முதலில் சிவாஜி 'பராசக்தி' எனும் திரைப்படத்தில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே இவரது நடிப்பு திறமையை மூலம் நடித்து அசத்தி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்தார். இதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. நடிகர் சிவாஜி நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த மக்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
இது போன்ற நிலையில் விஜய் நடிப்பில் வெளியான 'ஒன்ஸ்மோர்' திரைப்படத்தில் சிவாஜி சிம்ரன் போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். அப்பொழுது படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன. படப்பிடிப்பிற்கு சிவாஜி சீக்கிரமாக வந்துவிட்டாராம். பின்பு சிம்ரன் லேட்டாக வந்ததால் இயக்குனர் சிம்ரனை திட்டி பேக்கப் செய்ய சொல்லி இருக்கிறார்.
இதனையறிந்த சிவாஜி சிம்ரன் மும்பையில் இருந்து வந்த பெண் தானே. அவருக்கு என்னை பற்றி எதுவும் தெரியாது. இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று சிவாஜி கூறியிருக்கிறார். இதன்பிறகு சிம்ரன் சிவாஜியின் நடிப்பு திறமையை உணர்ந்து அவரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாராம் இச்செய்தி இணையத்தில் பரவி வருகிறது.