மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கஜா புயல்: நிவாரணம் வழங்கிய நடிகை ஸ்ரீரெட்டி! என்ன செய்துள்ளார் தெரியுமா?
தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என பலரும் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக போராட்டம் நடத்தினர் நடிகை ஸ்ரீரெட்டி. இதில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த பல முக்கிய நடிகர்கள் சிக்கினர். இதனால் நடிகை ஸ்ரீரெட்டிக்கு தெலுங்கு சினிமாவில் தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ் நாட்டிற்கு வந்த ஸ்ரீரெட்டி இங்கு பல சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் என வரிசையாகா புகார் அளித்தார். அதில் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி, AR முருகதாஸ் போன்ற பல முக்கிய பிரமுகர்கள் சிக்கினர். அதன்பின்னர் நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கஜா புயலால் பெரும் அளவில் பாதிக்கப்பட்ட டெல்ட்டா மாவட்டத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவியை செய்துவரும் நிலையில், நடிகை ஸ்ரீரெடியும் அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 300 மக்களுக்கு தலா இரண்டு கிலோ அரிசியும், மெழுகுதிரி , வாட்டர் பாட்டில் ஆகியவற்றை வழங்கியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. மேலும் குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்துள்ளார். இதனை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுல ஸ்ரீரெட்டி இந்த உலகமே என்னை தனிமை படுத்தியபோது எனக்கு ஆறுதலாக இருந்தது தமிழ் மக்கள் மட்டுமே என்றும் அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.