நான் கர்ப்பமான பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன்... டாப்ஸி ஓபன் டாக்... ரசிகர்கள் ஷாக்!!



Actress topcy speak about her marriage

தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் அறிமுகமானவர் நடிகை டாப்சி. முதல் படத்திலே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் டாப்சி. அதனை தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், முனி 3 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

பின்னர் தமிழில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது அங்கு அவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் இவர் நடித்த பிங்க் திரைப்படம் அவரின் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் டாப்ஸி ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

Topcy

அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு டாப்ஸி நான் இன்னும் கர்ப்பமாகவில்லை. அதனால் இப்போது என் திருமணம் இருக்காது என்று கூறியுள்ளார்.இந்த பதிவால் ரசிகர்கள் மிகுந்த ஷாக்காகியது மட்டுமின்றி டாப்ஸி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பாலிவுட் பிரபலங்களை பற்றி தான் மறைமுகமாக கூறியுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.