மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென உயிரிழந்த நடிகை வனிதாவின் முன்னாள் கணவர்.! ஏன்? என்னாச்சு? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களான வலம் வந்த விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியரின் மகள் வனிதா. அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக நடித்து சினிமாதுறையில் அறிமுகமானார். பின்னர் அவர் பெருமளவில் படங்களில் நடிக்கவில்லை.
பின்னர் திருமணம் மற்றும் சொந்த வாழ்க்கையில் தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்த வனிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சில செயல்பாடுகளால் விமர்சனத்துக்கு ஆளாகி மக்களிடையே பிரபலமானார். அது மட்டுமின்றி அவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து இணையத்தில் பேசுபொருளானார்.
பல பிரச்சினைகளை சந்தித்து, பலரது விமர்சனத்திற்கு ஆளான அவர்கள் திருமணமான ஒரு சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் வனிதா பட சூட்டிங், பிசினஸ் என பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில காலங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த பீட்டர் பால் தற்போது திடீரென உயிரிழந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.