மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. பணத்திற்காகவா.! நிக்கோலை திருமணம் செய்ய காரணம் இதுதான்.! ஓப்பனாக உடைத்த நடிகை வரலட்சுமி!!
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருபவர் நடிகை வரலட்சுமி. இவர் முன்னணி நடிகரான சரத்குமாரின் மகள் ஆவார். நடிகை வரலட்சுமிக்கு அண்மையில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருடன் குடும்பத்தினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்களாக இருந்து பின்னர் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்ய உள்ளனர். நிக்கோல் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். 43 வயது நிறைந்த அவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அவரை நடிகை வரலட்சுமி இரண்டாவதாக திருமணம் செய்துகொள்வது அவரது பணத்திற்காக தான் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து நடிகை வரலட்சுமி பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். எனது வருமானத்தில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். என்னிடமும் பணம் உள்ளது. நான் எதற்காக பணத்திற்காக இன்னொருவரை திருமணம் செய்ய வேண்டும். நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே நட்பாக பேசிக் கொள்வோம். அப்பொழுது அவர் அவருடைய மனைவியோடுதான் வாழ்ந்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு தான் நாங்கள் இருவரும் நேரில் சந்தித்தோம். அவருடைய பரிவு, பாசம் என் புரொபஷன் மீது அவருக்கு இருக்கும் அக்கறை என அனைத்தையும் பார்த்துதான் எனக்கு அவர் மீது காதல் வந்தது. அவர் எனது அப்பா, அம்மாவை நேரில் சந்தித்து அவரது காதலை கூறியிருக்கிறார். நாங்கள் நார்வேக்கு ஃபேமிலி டூர் சென்றபோது எனது அப்பா, அம்மாவிற்கு முன்பு என்னிடம் அவர் ப்ரொபோஸ் செய்தார். அவர் எனது உறவினர் கிடையாது. ஆனால் சிலர் நிக்கோல் எனது அப்பா போல இருப்பதாக கூறுகின்றனர். அது எனக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது என கூறியுள்ளார்.