மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட கொடுமையே.! ஜெயம் ரவி பட நடிகைக்கா இந்த நிலைமை... ரசிகர்கள் அதிர்ச்சி.!?
தென்னிந்திய திரைப்பட நடிகையான நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் 2015 ஆம் வருடம் 'மிஸ் இந்தியா' போட்டியில் பங்கேற்று இறுதி போட்டியாளரானார். தமிழ் சினிமாவில் கார் பந்தயத்தில் கலந்து கொண்ட ஒரே நடிகை நிவேதா பெத்துராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முதன் முதலாக 2016ஆம் வருடம் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களிடையே வெகுவாக ஈர்க்கப்பட்டது. இதனால் அடுத்தடுத்த படவாய்ப்புகள் நிவேதா பெத்துராஜுக்கு கிடைத்தது. உதயநிதி நடித்த 'பொதுவாக எம்மனசு தங்கம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். மேலும் ஜெயம் ரவியுடன் 'டிக் டிக் டிக்' படத்திலும் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
இதன்பின் பல படங்களில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பு நன்றாக இருந்தாலும் திரைக்கதை போதிய அளவு மக்களை கவனிக்கவில்லை. இதனால் படவாய்ப்பை இழந்த நிவேதா தெலுங்கு பக்கம் சென்றார். தெலுங்கில் 'மெண்டல் மதிலோ' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே செம்ம ஹிட்டாகியது. இவரின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது.
மேலும், தெலுங்கில் தொடர்ந்து நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த தாஸ்கா தம்கி திரைப்படம் இன்று வெளியானது. இந்தப் படத்தின் புரோமோஷனுக்காக நிவேதா பெத்துராஜ் தியேட்டரில் ரசிகர்களுக்கு டிக்கெட் கொடுக்கும் வேலையை செய்தார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.