மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகும் அதிதி ஷங்கர்.. இத்தனை படங்களா?
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் சங்கர். இவருடைய மகள் அதிதி சங்கர் கார்த்தியின் விருமன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த இரு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதிதி சங்கர் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார்.
அதன்படி நடிகர் அதர்வா தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கம் புதிய திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும், நடிகை அதிதி சங்கர் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்திலும் அதிதி சங்கர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.