மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. பிக்பாஸ் வீட்டிலிருக்கும் இந்த போட்டியாளர் மைனா நந்தினியின் நெருங்கிய உறவினரா.! அட.. யார்னு பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் அண்மையில் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் துவக்கத்தில் ஜிபி முத்து, அசல் கோலார், அசீம், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம், பாடகர் ஏடிகே, ஜனனி, ஷிவின் கணேசன், அமுதவாணன், விஜே மகேஸ்வரி, விஜே கதிர், ஆயிஷா, தனலட்சுமி, ஷெரினா,சரவணன் மீனாட்சி புகழ் ரக்சிதா,விக்ரமன், மணிகண்டன், சாந்தி மாஸ்டர், குயின்ஸி மற்றும் நிவாஷினி ஆகிய 20 பேர் கலந்துகொண்டனர்.
அவர்களை தொடர்ந்து மைனா நந்தினி வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சி துவங்கிய இரண்டாவது வாரத்திலேயே ஜிபி முத்து தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் சாந்தி மாஸ்டர், அசல் கோலார் மற்றும் ஷெரினா ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கிடையே சண்டை,சச்சரவுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் வீட்டில் செம கூலாக இருந்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் ஏடிகே என்னும் தினேஷ் கனகரத்தினம். விஜய் ஆண்டனி இசையில் ஆத்திச்சூடி பாடலை பாடி பிரபலமான அவர் இமான், ஏ ஆர் ரகுமான், சந்தோஷ் நாராயணன், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா என பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார். இந்த நிலையில் இவர் மைனா நந்தினியின் உறவினர் எனவும் ஏடிகே மைனா நந்தினிக்கு மாமன் மகன் எனவும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது.