Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
49 வயதிலும் மெழுகு சிலையாய் மின்னும் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இன்று குவா., குவா டே... குவியும் வாழ்த்துக்கள்...
1994 ஆம் ஆண்டு உலக அழகி என்ற பட்டத்தை வென்று பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். தமிழில் ஜீன்ஸ் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து பல விருதுகளையும் பெற்றார். இவர் நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி மொழியிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். இந்த தம்பதியினருக்கு ஆராத்யா என்ற அழகிய மகள் உள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இன்று தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஐஸ்வர்யா ராய்க்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். மேலும் இவரது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.