மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. ஐஸ்வர்யா ராயின் மகளா இது! அழகில் அம்மாவையே மிஞ்சிடுவார் போல.! வைரல் புகைப்படம்!!
தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். இவர் 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர். தொடர்ந்து அவர் பல தமிழ் படங்களில் நடித்து இளைஞர்களின் கனவு நாயகியாக வலம் வந்தார். மேலும் பாலிவுட் சினிமாவிலும் டாப் ஹீரோயினாக கொடிகட்டி பறந்தார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் பாலிவுட் டாப் நடிகராக திகழ்ந்த அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பின் சில பாலிவுட் படங்களிலே நடித்து ஐஸ்வர்யா ராய் மீண்டும் தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அசத்தலான ரீ என்ட்ரி கொடுத்தார்.
அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகும். அண்மையில் ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யா மற்றும் குடும்பத்தினருடன் முகேஷ் அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் ஐஸ்வர்யாராயின் மகளா இது! அழகில் அம்மாவையே மிஞ்சிவிடுவார் போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.