மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு எவ்வளவுனு பார்த்தீங்களா.! தலைசுத்தி போயிருவீங்க!!
உலக அழகி என்றாலே இன்றும் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராய்தான். அவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய இருவர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து இளைஞர்களின் கனவு நாயகியாக, முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
மேலும் அவர் பாலிவுட் சினிமாவிலும் கவனம் செலுத்தி டாப் ஹீரோயினாக வலம் வந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகு பாலிவுட் சினிமாவிலேயே நடித்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
படத்தில் நந்தினியாக இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. ஐஸ்வர்யா ராய் ஒரு படத்திற்கு சம்பளமாக 12 கோடி வரை பெறுகிறாராம். மேலும்
பல பிரபல நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார். இந்நிலையில் பல விலையுயர்ந்த பங்களாக்கள், ஆடம்பர சொகுசு கார்களை வைத்துள்ள ஐஸ்வர்யா ராயின் மொத்த சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளிவந்துள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராயின் மொத்த சொத்து மதிப்பு 776 கோடி என கூறப்படுகிறது. அவர் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் நடிக்க 10 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளாராம்.