மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாருக்குமே கிடைக்காத சான்ஸ்! மகள் ஆராத்யாவுக்கு இயக்குனர் மணிரத்னம் கொடுத்த முக்கிய பொறுப்பு!! பெருமையில் ஐஸ்வர்யா ராய்!!
பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படம். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகும் நிலையில் இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது அதற்கான புரோமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழுவை சேர்ந்த அனைவரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராயும் பங்கெடுத்து வருகிறார். மேலும் பேட்டியும் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை ஐஸ்வர்யா ராய் பகிர்ந்துள்ளார்.
அதாவது பொன்னியின் செல்வன் பட சூட்டிங் ஸ்பாட்டிற்கு ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவும் அவ்வப்போது உடன் வருவாராம். இந்நிலையில் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதே பெரிய அதிர்ஷ்டம் என பலரும் எண்ணியிருந்த நிலையில் படத்தின் ஒரு சீன் எடுக்கும்போது ஆக்சன் சொல்லும் பொறுப்பை இயக்குனர் மணிரத்னம் ஆராத்யாவிற்கு கொடுத்துள்ளாராம். அதனை சொல்லி ஆராத்யா மிகவும் சந்தோஷபட்டதாகவும், இதனை அவர் மறக்கமாட்டார். இது தனது மகளுக்கு கிடைத்த பெரிய பரிசு எனவும் ஐஸ்வர்யா ராய் பெருமையுடன் கூறியுள்ளார்.