பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கார் ரேஸ் ஓட்ட ட்ரைனிங் எடுக்கும் ஐஸ்வர்யா ரஜினி.! அதுவும் யாரிடம் பார்த்தீர்களா!! வைரல் வீடியோ!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இருமகன்கள் உள்ள நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவரவர் பணிகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். ஐஸ்வர்யாவும் ஆல்பம், படம் இயக்குவது, உடற்பயிற்சி என பிஸியாக உள்ளார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்கள், உடற்பயிற்சி, சைக்கிளிங் செய்யும் புகைப்படங்கள் போன்றவற்றை பகிர்வார். இந்நிலையில் அவர் தற்போது தனது தங்கை மகன் வேத்துடன் கார் ரேஸ் விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை பெற்று வருகிறது.