மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெயிலுக்கு இதமாக குடையையே ஆடையாய் அணிந்திருக்கும் ஐஸ்வர்யா ராய்.. கலாய்த்து வரும் நெட்டிசன்கள்.?
பிரான்ஸ் நாட்டில் கான் என்ற இடத்தில் ஒவ்வொரு வருடமும் சர்வதேச திரைப்பட விழா நடந்து வரும் இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகில் இருக்கும் எல்லா பிரபலங்களும் கலந்து கொள்வார்கள்.
இதில் இந்தியாவின் சார்பாக ஐஸ்வர்யா ராய், போன்ற பல நடிகைகள் வித்தியாசமான ஆடைகளில் கலந்து கொண்டனர். இதில் ஐஸ்வர்யா ராய் அணிந்திருக்கும் ஆடை இணையவாசிகளால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
ஐஸ்வர்யா ராய் சில்வர் நிற உடையில் தலையை சுற்றி முழுவதுமாக பிளாஸ்டிக் பேப்பரினால் கவர் செய்தது போல உடை அணிந்திருந்தார். இந்த உடையை கவனித்த நெட்டிசன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கலாய்த்து வருகின்றனர்.
வெயிலுக்கு இதமாக குடையை உடையாய் அணிந்திருக்கிறார் என்று சிலரும், ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமாக உடையை அணிகிறேன் என்று ஏமாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக உடை அணிந்து வருகிறார் என்று சில இணையவாசிகள் வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.