#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"உங்களுக்கு நான் உறுதுணையாக இருக்கிறேன்" யுவன் சங்கர் ராஜாவிற்கு நம்பிக்கைகொடுத்த அஜித்..
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமிப்பாளராக வலம்வந்து கொண்டிருக்கும் யுவன் ஷங்கர் ராஜா, தன் 16 வயதில் 'அரவிந்தன்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இன்று இவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், திரைபிரபலங்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
'அரவிந்தன்' திரைப்படத்திற்கு பிறகு, யுவன் ஷங்கர் ராஜா மேலும் சில படங்களுக்கு இசையமைத்தார். அந்த படங்களின் பாடல்கள் நன்றாக இருந்தாலும், படங்கள் தோல்வியடைந்ததால் இவருக்கு வேறு வாய்ப்புகள் வரவில்லை.
அந்த நேரத்தில் தான், அஜித் தனது 'தீனா' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை யுவன் ஷங்கர் ராஜாவிற்கு கொடுத்துள்ளார். முதலில் யுவன் தயங்கியபோதும், "உங்களால் முடியும். எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. உங்கள் பாடல்களை நான் மிகவும் ரசித்துக் கேட்டிருக்கிறேன்.
உங்களுக்கு நான் உறுதுணையாக இருக்கிறேன். என் படத்திற்கும் நீங்கள் இசையமைக்க வேண்டும்" என்று அஜித் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன்பின் இந்த படமும், பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. இதனை தொடர்ந்து அஜித்தின் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்திற்கும் யுவனிற்கு வாய்ப்பு கிடைத்தது . இவ்வாறு யுவனின் இசை பாதையில் அஜித் உறுதுணையாக நின்ற செய்தி தற்போது இனையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.