மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் என்ன கொலைகாரனா? இல்ல கொள்ளைக்காரனா? ரசிகரை கலாய்த்த நடிகர் அஜித்.! இந்த வீடியோவை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அஜித். இவரது படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாள் போன்றவற்றை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடுவர்.
மேலும் அஜித் குறித்த எந்த விவரங்கள் வெளிவந்தாலும் அதனை ரசிகர்கள் பெருமளவில் டிரெண்டாக்குவர். அஜித் தற்போது ஏகே 61 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
நடிகர் அஜித் தற்போது பைக் ட்ரிப் சென்றுள்ளார். அவர் லடாக்கில் இமயமலையின் பல முக்கிய இடங்களுக்கு சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் அஜித் பைக் ரைடு வந்திருப்பதை தெரிந்த ரசிகர்கள் சிலர் அவரை கண்டுள்ளனர்.
அப்பொழுது அவரிடம், உங்களை மூன்று நாட்களாக தேடிக்கொண்டிருந்தோம் என ரசிகர் கூற, அதற்கு அஜித் 'தேடிட்டு இருந்தீங்களா.. நான் என்ன கொலைகாரனா இல்ல கொள்ளைக்காரனா?' என நக்கலாக கேட்டுள்ளார். பின்னர் உங்களைப் பார்க்கதான் தேடினோம் என ரசிகர் கூற பின்பு இருவரும் தொடர்ந்து உரையாடியுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
#Ajith sir ❤️😍#AjithKumar #AK #AK61 pic.twitter.com/LM6XkYO7qZ
— Ajith Network (@AjithNetwork) September 16, 2022