மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏகே 61 படத்துக்காக சென்னையிலிருந்து ஐதராபாத் சென்ற பெரிய கண்டெய்னர்... அதற்குள் இருந்தது என்ன தெரியுமா.?
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடக்கூடிய நடிகர்களுள் ஒருவர் தல அஜித். இவர் கடைசியாக எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள இந்தப்படத்தின் திரைக்கதை வங்கி கொள்ளையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது புதிய தகவலாக படத்தில் மிக பெரிய அளவில் ரூபாய் நோட்டுகள் தேவைப்படும் என்பதால் சென்னையிலிருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் கண்டெய்னர் மூலமாக ஐதராபாத் படப்பிடிப்பு பகுதிக்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.