#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எதிர்பார்க்கவே இல்லைல.. நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லப்போவது யார் தெரியுமா? செம ஷாக்கில் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. 87 நாட்களைக் கடந்த இந்த நிகழ்ச்சியில் இதுவரை 12 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
மேலும் தற்போது பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சஞ்சீவ், சிபி, அமீர், நிரூப் ஆகியோரே உள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் முழுவதும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்லும் Ticket To Finale டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமான போட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் நீருப், தாமரை, பாவனி, பிரியங்கா, ராஜு மற்றும் சஞ்சீவ் ஆகியோர் அடுத்ததாக வெளியேறினர். இதனைத் தொடர்ந்து சிபி மற்றும் அமீர் ஆகியோர் மட்டும் இறுதி டாஸ்க்கிற்கு முன்னேறிய நிலையில் அமீர் வெற்றி பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பைனலுக்கு செல்வதற்கான டிக்கெட்டை பெற்ற முதல் வைல்ட் கார்டு போட்டியாளர் அமீர் எனவும் கூறப்படுகிறது.