#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#BigBreaking: அச்சச்சோ.. பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு படப்பிடிப்பில் விலா எலும்பு முறிவு.. மருத்துவமனையில் அனுமதி..!
பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து மெகா ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். இவருக்கு முன்பே உடல்நலத்தில் பல பிரச்சனைகள் உள்ளது என்று தகவல்கள் கசிந்திருந்த நிலையில், அவரது கல்லீரல் 70 சதவீதம் செயலிழந்து விட்டதாகவும் தகவல்கள் பரவி வந்தன.
இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஆக்ஷன் காட்சியில் அமிதாப் பச்சனும் இடம்பெற்றுள்ளார்.
"In Hyderabad at shoot for Project K, during an action shot, got injured, rib cartilage popped broke & muscle tear to the right rib cage. Cancelled shoot, did doctor consult & scan by CT at AIG Hospital in Hyderabad & flown back home," posts Amitabh Bachchan.
— ANI (@ANI) March 6, 2023
(pic 2: file pic) pic.twitter.com/BqHu6yKirL
அத்துடன் இப்படப்பிடிப்பில் நடிக்கும்போது எதிர்பாராதவிதமாக அவரது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, அவர் அவரச சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மருத்துவர்களின் ஆலோசனைக்கு பின்பே அவர் மும்பையில் உள்ள தன் வீட்டிற்கு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் இணையத்தில் பரவியதால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.