#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குழந்தை பிறப்பதற்கு முன்பே ஆணா? பெண்ணா என்று வீடியோ வெளியிட்ட எமி ஜாக்சன்!
இயக்குனர் AL விஜய் இயக்கத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வர தொடங்கினார்.
அதன்பின்னர் விக்ரம், தனுஷ், விஜய், உதயநிதி ஸ்டாலின் என தமிழ் சினிமாவின் பிரபலங்கள் படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் ரஜினியின் எந்திரன் 2.0 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் திருமணத்திற்கு முன்பே நடிகை எமிஜாக்சன் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வந்தன.
அதனை உறுதி செய்யும் வகையில் நடிகை எமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதாய் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தான் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுவந்த அவர் தற்போது தனது வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது வயிற்றில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தை என தெரிவித்துள்ளார்.
We’re having a........ ✨💙🧚🏼♂️ pic.twitter.com/DGSqvYKYZr
— Amy Jackson (@iamAmyJackson) August 26, 2019