ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
எம்மா எமி என்னது இது?.. புதுவிதமான தோற்றத்தில் காட்சி தந்த எமி ஜாக்சன்.. ஏங்கித்தவித்த ரசிகர்களுக்கு அசத்தல் கிளிக்ஸ்.!
கடந்த 2010ல் வெளியான மதராசபட்டினம் திரைப்படம் மூலமாக, தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் தந்த இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன். இவர் அதனைத்தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்களிலும் நடித்துவிட்டார்.
தமிழில் இவரின் நடிப்பில் தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி, தேவி, 2.0 ஆகிய படங்கள் வெளியாகி இருக்கின்றன. Mission Chapter 1: அச்சம் என்பது இல்லையே திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து லிவிங் டுகெதர் வாழ்கையில் இருந்த எமி ஜாக்சன், அவருடன் குழந்தையையும் பெற்றுக்கொண்டுள்ளார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.
மாடல் அழகியான எமி ஜாக்சன் எப்போதாவது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார். இந்த நிலையில், கடற்கரையில் அவர் வித்தியாசமான உடையை அணிந்து வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது.