திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
லியோ பட புதிய போஸ்டரால் வெடித்த சர்ச்சை.! தளபதி விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் விடுத்த வேண்டுகோள்!!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. லியோ படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் ஜூன் 22ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் முதல் பாடலான நா ரெடி என்ற பாடல் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தார். அதில் நடிகர் விஜய் கையில் கையில் கெத்தாக துப்பாக்கியும், வாயில் சிகரெட்டும் வைத்துள்ளார். இந்நிலையில் இந்த போஸ்டர் வைரலான நிலையில் பலரும் விஜய் புகைப்பிடிப்பது போன்று நடித்ததற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 16, 2023
லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர்…
இந்நிலையில் இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்! லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது.
புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.