மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென்று பத்திரிக்கையாளர்களிடம் சண்டை போட்ட தொகுப்பாளினி அஞ்சனா.. என்ன காரணம்.?
சின்னத்திரை பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் அஞ்சனா. இவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணி புரிந்துள்ளார். மேலும் சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
சின்னத்திரையில் அனைவருக்கும் பிடித்தமான தொகுப்பாளினி எனும் பெயர் பெற்றவர் அஞ்சனா. இவ்வாறு தொகுப்பாளினியாக பிஸியாக இருக்கும்போதே நடிகரான சந்திரன் என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார்.
இது போன்ற நிலையில், சித்தார்த் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சித்தா' படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றியைப் பெற்று ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. மேலும் இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது.
இதில் தொகுப்பாளினியாக அஞ்சனா பங்கேற்றார். அப்போது இந்நிகழ்ச்சிக்கு சித்தா படகுழுவினரும் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததால் பத்திரிகையாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். இதையடுத்து படக்குழுவினரை மேடைக்கு அழைக்காமல் தொகுப்பாளினியான அஞ்சனா படம் குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். இதனால் கடுப்பான பத்திரிக்கையாளர்கள் கைதட்டி அஞ்சனாவை பேசுவதை நிறுத்தும்படி கூறியுள்ளனர். இதற்கு அஞ்சனா இப்படி தான் மேடையில் அவமரியாதை செய்வீர்களா என்று கேட்டு சண்டையிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
— TamilTalkiesVid (@ttnVids) October 8, 2023