பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
முதல் முறையாக வெளியான நடிகர் ஜெகனின் அழகான மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படம்!

நடிகர், தொகுப்பாளர் என பல திறமைகளை கொண்டவர் நடிகர் ஜெகன். இவரை நடிகர் என்பதை விட விஜய் தொலைகாட்சி தொகுப்பாளர் என்றே கூறலாம். ஏனெனில் விஜய் தொலைகாட்சியில் இவர் தொகுத்து வழங்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய கனெக்சன் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது.
அதுபோல, இயக்குனர் KV ஆனந்த் இயக்கியத்தில், சூர்யா நடிப்பில் வெளியான அயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெகன். மேலும், கோ, அம்புலி, மரியான், கவண் போன்ற பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெகன்.
தற்போது அடுத்ததடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் நடிகர் ஜெகன் தனது நீண்டநாள் காதலியான வான்மதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகான ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இதுவரை வெளிவராத இவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.