#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதனால்தான் பிடிக்கலை! தாலியை கழட்டினாலும் என்ன தப்பு! நெட்டிசனுக்கு அதிரடி பதிலளித்த பிக்பாஸ் அனிதா சம்பத்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அனிதா சம்பத். அவர் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். மேலும் வெள்ளிதிரையிலும் கால்பதித்து அனிதா சம்பத் சர்க்கார், காலா, காப்பான் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மனதில் பட்டதை பட்டென நேரடியாக பேசிவிடுவார். இதனால் பிக்பாஸ் வீட்டில் பல சண்டைகளும் நேர்ந்துள்ளது. அதனாலேயே அவர் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு ஆளானார். ஆனால் அவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய ஒரு சில நாட்களிலேயே அவரது தந்தை மரணமடைந்த நிலையில் வேதனையில் இருந்த அனிதாவின் மீது ரசிகர்களின் கோபம் மறைந்து போனது.
அனிதா சம்பத் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார். இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார். அவ்வாறு அவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை கண்ட ரசிகர், நெற்றியில் குங்குமம் வைத்தால் மேலும் ஒரு மடங்கு அழகாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதற்கு அனிதா, என் செய்தியை பார்ப்பவர்கள் எல்லா மதத்தையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு என் மதத்தை அடையாளப்படுத்துவதில் விருப்பம் இல்லை. குங்குமம், விபூதி, பூ, தாலி இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிப்பவை. அவற்றை நான் பின்பற்றுவதில்லை. யாவரும் கேளிர் என பதிலளித்துள்ளார். மேலும் அவர், தாலியை கழற்றுவதில்லை. மறைத்துக்கொள்வேன். மதத்தை அடையாளப்படுத்த விரும்பாமல்தான். ஆனால் அப்படியே கழற்றினாலும் அதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.