"கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!
சீமந்த விழாவில் தர்பூசணி பரிசு.. அரியலூர் தம்பதி அசத்தல் செயல்.!

சமீபத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தர்பூசணி பழங்களில் சுவைக்காகவும், நிறத்திற்காகவும் ரசாயன ஊசி போடப்படுவதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இவரது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, தர்பூசணி விவசாயிகளுக்கு இது பெரும் நஷ்டத்தை உருவாக்கியது.
இதனால், விவசாயிகளிடமிருந்து தர்பூசணி பழங்களை கொள்முதல் செய்பவர்கள் வாங்காமல் அவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மன்னிப்பு கேட்டு தர்பூசணி பழத்தில் எந்த கெமிக்கலும் இல்லை சாப்பிடுங்கள் என்று தெரிவித்து இருந்தார். ஆனாலும், தர்பூசணி பழங்களை வாங்க பொதுமக்கள் தற்போது தயக்கம் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், தர்பூசணி விவசாயிகளை ஆதரிக்கும் வகையில் அரியலூர் மாவட்டம் மருதூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களது சீமந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தர்பூசணி பழங்களை பரிசாக வழங்கி இருக்கின்றனர். அரியலூர் மாவட்டம் மருதூர் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் என்பவருக்கு அபிநயா என்ற மனைவி இருக்கின்றார்.
இதையும் படிங்க: சுற்றுலா சென்ற மாணவ-மாணவிகள் வாகனம் விபத்தில் சிக்கி அதிர்ச்சி.. 11 பேர் காயம்.!
தற்போது அவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது வளைகாப்பு விழாவில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு தர்பூசணி பழங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இது பற்றி அந்த தம்பதி பேசிய போது சமீபத்திய சர்ச்சையை தொடர்ந்து விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த பரிசை நாங்கள் வழங்குகின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 12 வயது சிறுவனுக்கு எமனான ஊஞ்சல்.. கழுத்தில் சேலை இறுக்கி நேர்ந்த சோகம்.! பெற்றோர் கண்ணீர்.!