தாமதமான ரயில்.. டிக்கெட் தொகையை திருப்பி பெற இதை செய்தால் போதும்.!



train ticket booking price refund

ரயில்வே நெட்வொர்க் இந்தியாவில் மிகப் பெரியது. அன்றாடம் கோடிக்கணக்கான மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து வசதிகளை விட ரயிலில் பயணிப்பது மக்களுக்கு மிகவும் சவுகரியமான ஒன்றாகும். இதன் கட்டணமும் மிகக் குறைவு. 

மேலும் ரயில் பயணத்தில் வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம். பேருந்துகளில் இல்லாத கழிப்பறை வசதிகள், படுக்கை வசதிகள் உள்ளிட்ட பலவும் இருக்கின்றன. சில சமயங்களில் ஏதாவது காரணங்களால் ரயில்கள் மிக தாமதமாக வருகின்றன. 

இந்த நிலையில் பயணிகள் அந்த ரயில் சேவையை விடுத்து வேறு விதமாக தங்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இப்படி முன் பதிவு செய்து ரயில் தாமதம் ஆகி அதில் பயணிக்காமல் போனால், அவர்கள் செலுத்திய முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வந்தது. 

இதையும் படிங்க: கர்ப்பிணி என்றும் பாராமல்.. நடுரோட்டில் தள்ளி.. கல்லால் கணவர் தாக்குதல்.! #வீடியோ.! 

இவ்வாறு 3 மணி நேரத்திற்கு மேல் ரயில் தாமதமாகி வந்து அதில் பயணி பயணிக்காமல் போனால் எவ்வாறு கட்டணத்தை திரும்பி பெறலாம் என்றால், கவுண்டர் டிக்கெட் என்றால் நேரில் சென்று இதற்காக நாம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக் செய்தீர்கள் என்றால் அதை ஆன்லைனிலேயே அப்ளை செய்து பணத்தை திரும்பி பெறலாம்.

இதையும் படிங்க: விபரீத சடங்கு.. உ.பி-யில் மாப்பிள்ளையை வச்சு செய்த மணமகள் தரப்பு.! அதிர்ச்சி காரணம்.!