மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இது எங்களோட பெரிய கனவு! சந்தோசமான செய்தியை வெளியிட்ட அனிதா சம்பத்! குவியும் வாழ்த்துக்கள்!!
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அனிதா சம்பத். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.
மேலும் அதனை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக்குடன் கலந்து கொண்டு தனது திறமையால் வெற்றி பெற்றார். பின்னர் அனிதா சம்பத் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தனது செயல்களாலும், பேச்சாலும் அவர் ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளானார்.
இந்நிலையில் அனிதா சம்பத் தற்போது சந்தோஷமான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது அனிதா சம்பத் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், Finally! வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிக பெரிய கனவு.வாடகை வீட்டுலயே நல்ல வீடு கிடைக்காதா..பெட்ரூம் வச்ச வீட்டுக்கு போக மாட்டோமானு ஏங்குன காலம் எல்லாம் இருக்கு..ஓட்டு வீடுல பிறந்து வளர்ந்த பிரபாக்கும் அதே தான்.இன்னக்கி எங்களுக்கு பிடிச்ச மாதிரி எங்களுக்காக ஒரு வீடு.
நிறைய வலிகளும் நிறைய உழைப்பும் நிறைய மெனக்கெடல்களும் கடந்து அன்னையர் தினம் அன்று எங்கள் அன்னையர்களுக்காக அவர்களின் சொந்த வீட்டு கனவை நினைவாக்கி விட்டோம் “நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும்”. இப்ப அதை இன்னும் வலிமையா நம்புறேன். இதை படிக்கிற நீங்க எல்லாருமே சீக்கிரம் வீடு வாங்குவீங்க.எங்க சார்பா அதற்கான வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.