#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புதிதாக முதல் கார் வாங்கிய குக் வித் கோமாளி புகழ்! பிக்பாஸ் அனிதா சம்பத் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் புகழ். இந்நிகழ்ச்சியில் அவர் செய்யும் ரகளைகள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமின்றி தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் புகழ் தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், நான் எத்தனையோ காரை தொடச்சு இருக்கேன். வாட்டர் வாஷ் செய்திருக்கிறேன். பத்து,இருபது ரூபாய் கொடுப்பார்கள். ஆனால் இன்று நான் சொந்தமாக கார் வாங்கியுள்ளேன். இதுதான் என் பரம்பரையிலேயே முதல் கார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். மேலும் இதுகுறித்து செய்தி வாசிப்பாளரும், பிக்பாஸ் பிரபலமுமான அனிதா சம்பத், கஷ்டப்பட்டு உழைச்சு சொந்த காசுல நெனச்சத வாங்குவதை விட சுகம் வேறு ஏதும் இல்லை என்று பதிவிட்டு தனது வாழ்த்துக்களை புகழுக்கு தெரிவித்துள்ளார்.