ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
நயன்தாரா சொன்ன ஒத்த பதில், டாப்பான இடத்தை பிடித்த அனுஷ்கா!! என்ன காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய் அஜித் சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து வெற்றிப் படங்களில் இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா.
ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனை தொடர்ந்து தற்போது விஜய் 63, தர்பார் உள்ளிட்ட படங்களில் தீவிரமாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
மேலும் சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், மாய மோகினி நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கின்றனர். மேலும் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்பாபு மற்றும் சத்யராஜ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இவ்வாறு மாபெரும் நடிகர்,நடிகைகள் நடிக்கும் இப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் சரியான தேதிகள் கிடைக்காத நிலையில் அந்த படத்திலிருந்து நயன்தாரா விலகியுள்ளார்.
மேலும் அவருக்கு பதிலாக பூங்குழலி கதாபாத்திரத்தில் பிரபல நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.