மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது #meToo அனுபவம் பற்றி நடிகை அனுஷ்கா என்ன கூறியுள்ளார் தெரியுமா?
சினிமா துறையில் தான் அனுபவித்த பாலியல் தொல்லைகள் பற்றி நடிகைகள் பலர் #me Too வில் பேசி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை அனுஷ்காவுக்கும் பாலியல் தொல்லை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து நடிகை அனுஷ்கா கூறியதாவது, அதாவது சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக நடிகைகள் பலரும் #me Too வில் புகார் தெரிவித்து வருகின்றனர். படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இல்லை என்று என்னால் கூற முடியாது. சினிமா துறை கவர்ச்சி மிகுந்தது. அதனால் இங்கு நடப்பது ஒரு பெரிய விஷயமாக பேசப்படுகிறது.
சினிமா துறை மட்டுமின்றி எல்லா துறைகளிலும் பாலியல் தொல்லைகளை சந்தித்து வருகின்றனர். தானும் சினிமாவிற்கு வந்த புதிதில் பாலியல் தொல்லைகளை அனுபவித்ததாக நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். ஆனால் பெரிய அளவில் பிரச்சினை ஒன்றும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் சில கஷ்டங்களை மட்டும் சந்தித்தாக கூறியுள்ளார். ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாதபோது நிர்ப்பந்தம் செய்வது தவறு. தவறான கண்ணோட்டத்தில் நெருங்கும் ஆண்களிடம் முடியாது என்று மறுத்து விட்டால் பிறகு அவர்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள். நமக்கு மரியாதை தரவும் தொடங்கி விடுவார்கள் என்று கூறியுள்ளார்.