#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"அந்த மாதிரி நேரத்துல என் மனைவி கூட என் பக்கத்துல வர பயப்படுவாங்க" ஏ ஆர் ரகுமானின் கலகலப்பான பேச்சு..
தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ ஆர் ரகுமான். இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பாடல்களை இசையமைத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.
மேலும் இசையின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் ஏ ஆர் ரகுமான். இவர் முதன் முதலில் ரோஜா திரைப்படத்தில் இசையமைத்து தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.
முதல் படமே மிகப்பெரும் வெற்றியடைந்து அடுத்தடுத்து பாடல்களை இசையமைத்து வருகிறார் ரகுமான். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைபடத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் எல்லாம் மிகப் பெரும் ஹிட்டாகின என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில், ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அந்த இசை நிகழ்ச்சியில்யை குறித்து சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் கூறியிருக்கிறார். "இசை நிகழ்ச்சி பாடுவதற்கு ஓய்வு, தூக்கம் மிகவும் அவசியம். தூக்கம் இல்லை என்றால் வாய்ஸ் சரியாக வராது. அந்த மாதிரி நேரத்தில் என் மனைவியே என் பக்கத்தில் வர பயப்படுவாங்க. அந்த அளவுக்கு ஃபயர் மோடில் இருப்பேன்" என்று கூறி கலகலப்பாக பேசினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.